Fwd: விபத்தில் இளம் பெண் ஒருவர் பலி - வருங்கால கணவர் பலத்த காயங்களுடன் அம்பாரை போதானா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில்!!
வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சுந்தரலிங்கம் அர்ச்சனா எனும் இளம் பெண் ஒருவர் பலியானதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய அவரது வருங்கால கணவர் பலத்த காயங்களுடன் அம்பாரை போதானா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் கார் விபத்திலேயே இவ்வாறு இளம் பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் அவரது வருங்கால கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் தம்பிலுவிலை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்திருமணத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் செய்து கொண்டவர்கள் திருமண நாளை எதிர்பார்த்திருந்த நேரத்திலேயே இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து தம்பிலுவிலை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்திலேயே காரினால் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் திரும்கோவில் ஆதாரவைத்திய சாலையில் வைக்கப்பட்டு;ள்ள நிலையில் காரில் பயணம் செய்தவர்கள் திருக்கோவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் விபத்துப்பற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முறையற்ற வாகன ஓட்டுனர்களால் அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது எப்போது நிறுத்தப்படும்.
.jpeg)
No comments