அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் காணியுள்ளிட்ட பல பிரச்சனைகள் தொடர்பில் கட்சி சார்பாக அரசாங்கத்துக்கு கடிதம் ! ஆலையடிவேம்பில் சுமந்திரன் தெரிவிப்பு!!
( ஆலையடிவேம்பிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
இங்கு தெரிவிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் காணியுள்ளிட்ட பல பிரச்சனைகள் தொடர்பில் எமது கட்சி சார்பாக அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பப்படும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் (14) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றபோது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
கூட்டத்தில் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் திருக்கோவில் காரைதீவு சம்மாந்துறை நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளிலுள்ள கட்சியின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு காணி விடுவிப்பு, கல்முனை வடக்கு பிரதேச செயலகம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், வீரமுனை வரவேற்பு வளையி பெயர்ப்பலகை, கல்முனை மத்தி வலயம், சமகால அரசாங்கத்தின் புறக்கணிப்பு தொடர்பாக பல பிரச்சனைகளை முன்வைத்தனர்.
அதற்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்.
பிரதேசத்தில் நடைபெறுகின்ற அரசாங்க நிகழ்வுகளில் எமது கட்சி உள்ளூராட்சி தவிசாளர் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படைவது குறித்து கூறப்பட்டது.
No comments