இன்று நிகழும் சூரிய கிரகணத்தை இலங்கையில் பார்க்க முடியுமா?
இன்று சூரியகிரகணம் நிகழவுள்ளது. பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த அரிய நிகழ்வு நடக்கிறது. இது, பிரபஞ்சத்தின் துல்லியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த கிரகணம் ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். அதாவது, சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும். ஆனால், இலங்கையில் இந்த கிரகணம் தெரியாது.
இன்று நிகழும் இந்த கிரகணம், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தெரியாது.
இந்த நிகழ்வானது இலங்கை நேரப்படி இரவு 11:00 மணி மணிக்குத் தொடங்கி, மறுநாள் அதிகாலை 1:11 மணிக்கு உச்சத்தை அடைந்து அதிகாலை 3:23 மணிக்கு முடிவடையும்.
ஆனால், இலங்கையில் அந்த நேரத்தில் சூரியன் அடிவானத்திற்கு கீழே இருக்கும். எனவே, இந்த கிரகணத்தை இலங்கையில் பார்க்க முடியாது.
அதேநேரத்தில் கிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் வசிப்பவர்கள் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.
No comments