Column Left

Vettri

Breaking News

5 வீதிகளுக்கு ஒரு நாளில் அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பம்!!




பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி - அஸ்ரப் நகர் பாதை 16.9 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன்  கல்முனை  மருதமுனையில் பிரதேசங்களில் இரு வீதிகளும்  நற்பிட்டிமுனையில் ஒரு வீதியுமாக  மொத்தம் 5 வீதிகள் ஞாயிற்றுக்கிழமை(21)  ஆரம்பித்து வைக்கப்பட்டது .
 
கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தீகவாபி -  அஸ்ரப் நகர் பிரதான வீதி 16.9 மில்லியன் ரூபா நிதியில் அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இப்பாதை அபிவிருத்திக்கான ஆரம்ப வைபவம் தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரும்  பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளருமான சுல்தான் சத்தார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது  பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா  கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வீதிப் புணரமைப்பு வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது 250 மீற்றர் கொங்கிறிட் பாதையாக அமைக்கப்படவுள்ள இப்பாதையின் மூலம் ஒலுவில் -  அஸ்ரப் நகர் - திகவாபி கிராம மக்களும்  ஒலுவில் பிரதேச விவசாயிகளும் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

அத்தோடு ஒலுவில் பிரதான வீதியிலிருந்து அஸ்ரப் நகர் - தீகவாபி ஊடாக அம்பாரை நகரத்திற்கு செல்லும் பிரதான பாதையாகவும் இப்பாதை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 கடந்த இரண்டு வருடங்களில ஏற்பட்ட இரண்டு வெள்ளப் பெருக்கினால் இப்பாதை உடைக்கப்பட்டு பெரும் கிடங்காகக் காணப்பட்டதனால் அஸ்ரப் நகர் மற்றும் தீகவாபி கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் பெரும் சிரமப்பட்டதுடன் பல கிலோமீற்றர் தூரத்தின் ஊடாக மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வேளை  தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் சுல்தான் சத்தாரின்   வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா   பெரும் முயற்சியினால் இப்பாதையை புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அதற்காக 16.9 மில்லியன் ரூபா நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் பிரதேச சபை உறுப்பினர்கள் பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட விவசாயிகள்  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை  இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதம்பாவா எம்.பி உரையாற்றுகையில்  ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியாகவும்இ பிரதமராகவும்இ அமைச்சர்களாகவும் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பபடுவார்கள் என்பதை எமது நாட்டின் ஜனாதிபதி நிருபித்துள்ளார். தான் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதுடன் நாட்டின் அபிவிருத்திக்காக கடுமையாக உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்'.

No comments