Column Left

Vettri

Breaking News

இன்று முப்பெருவிழாவில் காரைதீவு இளம் நடனதாரகை தக்ஷாலினிக்கும் இளம் வித்தகர் விருது!!




( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா)

டென்மார்க் கணேஷ நாட்டிய ஷேத்ரம் , டென்மார்க் மற்றும் இனிய திருச்சிராப்பள்ளி நந்தவனம் தமிழ்நாடு இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் காரைதீவைச் சேர்ந்த இளம் நடனதாரகை ஜெயகோபன் தக்ஷாலினி இளம் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இம் முப்பெரும் விழா கொழும்பு தமிழ் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

டென்மார்க் கணேச நாட்டிய சாஸ்திர உரிமையாளர் நடன ஆசிரியை  திருமதி.சசிதேவி ரைஸ் அம்மா முன்னிலையில் இளம் வித்தகர் விருது வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கையின் இயல் இசை மற்றும் நாடக நடனத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களான , 
இசை நாடக கலைஞர் நாகலிங்கம் விமலதாஸ் , இசை வாத்திய கலைஞரான லோகேந்திரன் மகேந்திரன் , சைவப்புலவர் கஜேந்திர சர்மா , நுண்கலைத்துறை மாணவி ஜெயகோபன் தக்‌ஷாளினி ஆகியோருக்கு இளம் கலை வித்தகர் விருது வழங்கப்பட்டது.

No comments