அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையினை தேசிய ரீதியில் முதலிடத்தை பிடிக்கச் செய்து வரலாற்றுச்சாதனை!!
வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் ராம் கராத்தே சங்கத்தின் மாணவர்கள் பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்டு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையினை தேசிய ரீதியில் முதலிடத்தை பிடிக்கச் செய்து வரலாற்றுச்சாதனையை நிலைநாட்டியதை கௌரவிக்கும் முகமாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்வு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகர் பிரதம போதனாசிரியர் சிகான் கேந்திரமூர்த்தி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா மற்றும் கராத்தே பயிற்சி ஆசிரியர்கள் பாடசாலையின் பிரதி அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ஆசிரியர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் இருந்து வான்ட் வாத்தியத்துடன் வாகனத்தில் பவனியாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்றனர்.
இதன் பின்னராக பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் இமாலய சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகர் பிரதம போதனாசிரியர் சிகான் கேந்திரமூர்த்தி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா மற்றும் கராத்தே பயிற்சி ஆசிரியர்கள் பாடசாலையின் பிரதி அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ஆசிரியர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் இருந்து வான்ட் வாத்தியத்துடன் வாகனத்தில் பவனியாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்றனர்.
இதன் பின்னராக பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் இமாலய சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டின் கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 09,12,13,14 ஆம் திகதிகளில் பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தை சேர்ந்த அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியலாயம், கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம் ஆகிய 3 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி - 03 தங்கம் - 02 வெள்ளி - 02 வெண்கலம் அடங்கலாக மொத்தம் - 07 பதக்கங்களை வென்றது மட்டுமல்லாது 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான சம்பியனாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டது.
இதேநேரம் எஸ்.நவக்சன் எனும் மாணவன் இவ்வருடத்திற்கான
சிறந்த கராத்தே வீரனாகவும் தெரிவு செய்யப்பட்டார். இவர் கடந்த வருடமும் சிறந்த கராத்தே வீரனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை தேசியா ரீதியில் முதலாம் இடத்தினை சுவீகரித்து இமாலய சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான காட்டாவில் எஸ்.கிவோன்ஸ்டன் தங்கம் வென்றதுடன் கே.தர்னிஸ் வெண்கலப்பதக்கத்தினை வென்றார். 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குமிற்றியில் தங்கப்பதக்கத்தினையும் காட்டாவில் வெள்ளிப்பதக்கத்தினையும் எஸ்.நவக்சன்; பெற்றதுடன் பெண்களுக்கான காட்டாவில் ரி.நிதுர்சிகா வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றனர்.
குழு காட்டாவில் எஸ்.கிவோன்ஸ்;டன் கே.தர்னிஸ் எஸ்.நவக்சன் ஆகியோர் தங்கப்பதக்கத்தினையும் குழு குமிற்றியில் கே.தர்னிஸ் கே.சஜந்தன் எஸ்.நவக்சன் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தினையும் வென்றனர்.
இக்கௌரவிப்பு நிகழ்வில் மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் நீளம் பாய்தலில் தங்கம் வென்றதுடன் 100 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுக்கொண்ட எஸ்.விபூக்சனா ஈட்டி எறிதலில் வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொண்ட ரி.நிதுர்சிகாவும் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வெற்றிகளுக்காக உழைத்ததுடன் பயிற்சிகளை மேற்கொண்;ட ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தி பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளரும் கராத்தே பயிற்றுவிப்பாளருமான கே.ராமிலன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் கே.சாரங்கன் மற்றும் பாடசாலைகளில் பயிற்சியை வழங்கிய வி.டினேஸ்ராஜ் ஆர்.ஹேமலக்சன் கராத்தே உதவி ஆசிரியர்கள் எஸ்.கிதுர்ஜன் ஆர்.வேணுஜன் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும்
மேலும் இவ்வெற்றிக்கு பங்காற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார், மற்றும் பிரதி கல்வி பணிப்பாளர்கள் கமலமோகனதாசன் மற்றும் நசீர் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் சதீஸ்குமார் மற்றும் கல்லூரியின் அதிபர் ,பிரதி அதிபர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான அஜ்மல்; ,மற்றும் சித்தீக மாணவர்களுக்கான இயன் மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கிய இயன் மருத்துவர் கரன்ராஜ் மற்றும் நன்கொடையாளர்களான ராம் கராத்தே சங்கத்தின் நலன்புரி அமைப்பு மற்றும் தாயக கல்வி விடியல் அமைப்பினருக்கும் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.
No comments