இன்று காரைதீவில் காளான் செய்கை ஊக்குவித்தல் செயற்திட்டம்!!
(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவிக்குட்பட்ட பகுதிகளில் காளான் பயிர்ச் செய்கை மற்றும் உணவு தயாரித்தல் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .
காரைதீவு பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் இன்று (19) வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் உதவி
விவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் மற்றும்
தொழில்நுட்ப உதவியாளர் ஏரி.தஸ்னிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அங்கு காளான் செய்கை உற்பத்தி தொடர்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன் காளான் உணவைஎவ்வாறு சமைப்பது எவ்வாறு உட்கொளுவது என்பது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அங்கு காளான் சூப் தயாரித்தல் தொடர்பாக செய்முறையுடன் கூடிய விளக்கம் அளிக்கப்பட்டது.
No comments