Column Left

Vettri

Breaking News

கருக்கலில் கோட்டைக்கல்லாற்றுக்குள் புகுந்த யானைகள் ; மக்கள் அச்சத்தில் ஓட்டம் !




( வி.ரி. சகாதேவராஜா)

அந்திமாலை கருக்கல் வேளையில்  கோட்டைக்கல்லாற்றுக்குள் புகுந்த யானைகளால் மக்கள் பதற்றம் அடைந்து அச்சத்தில் கிலி கொண்டு ஓடினர்.

 இச்சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோட்டைக்கல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது .

எங்கிருந்தோ வந்த நான்கு பாரிய யானைகள் வாவியினைக் கடந்து கோட்டைக்கல்லாற்றுக்குள் நுழைந்தன. 

 நான்கு யானைகள் வந்திருக்கின்ற செய்தி ஊரெல்லாம் பரவ மக்கள் கிலி கொண்டனர்.வாவிக் கரையில் உள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு கருதி இடம் பெயர்ந்திருந்தனர்.

பலர் வாவியில் தோணியை செலுத்தி யானைகளின் நடமாட்டத்தை அவதானித்ததுடன் படமும் எடுத்து இருக்கின்றார்கள். வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலர்களும் நின்றிருந்தனர்.

 இரவுபூராக நின்ற யானைகள் காலையில் மகளூர் பக்கம் சென்றதாக கூறப்படுகிறது.

இதேபோன்று நேற்று முன்தினம் மாலை சம்மாந்துறை நகரில் யானை ஒன்று புகுந்து பீதியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments