Column Left

Vettri

Breaking News

3 கோடி ரூபா செலவில் பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!





( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு விபுலானந்தா 
மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலம் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

அதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம் பழமையான பாலத்தை உடைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது.

அதனோடு ஒட்டியதாக தற்காலிக உப பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இப் பழமை வாய்ந்த இப் பாலம்  இறுதி காலகட்டத்தில் எப்போது விழும்? என்ற அபாய நிலையில் இருந்ததை ஊடகங்கள் தொடக்கம் பலரும் பல கூட்டங்களிலும் கூறி இருந்த பொழுதும் அது கடந்த பத்து வருட காலம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. 
 இதேபோன்று காரைதீவில் மேலும்  நான்கு பாலங்கள் இருக்கின்றன .

இருந்த பொழுதிலும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் இவ்வருடம் இப் பாலத்தை மாத்திரம் புனரமைக்க திட்டமிட்டு வேலையை ஆரம்பித்து இருக்கிறார்கள் .

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எந்திரி பி. ராஜமோகனிடம் கேட்ட பொழுது இப் பாலத்துக்கு சுமார் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது .அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. மழைக்கு முன்னதாக இதனை முடிவுறுத்த வேண்டும் என்று எண்ணி இருக்கின்றோம். என்றார்.

No comments