Column Left

Vettri

Breaking News

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது




2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சேனைக்குடியிருப்பு கமு/ கணேஷா மகா வித்தியாலய மாணவர்களான ஒ. லுக்சிதா ( 142 ) , ம. கிருத்திகா ( 138 ) , நொ. டிலுக்சன் ( 136 ) ஆகியோர் மேற்படி புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர் . இவர்களுக்கான பாராட்டு நிகழ்வு அதிபர் திரு. திருமதி. வாசுகி ஐங்கரன் அவர்களின் தலைமையில் சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலய கல்வி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முழுமையான ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் போது சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டதோடு கல்முனை வலயக்கல்வி பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் சாந்தகுமார் அவர்களும் பிரதி அதிபர் திருமதி. A. இராஜதுரை மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்

No comments