Column Left

Vettri

Breaking News

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் சமாதிநிலை திருவுருவச்சிலை பிரதிஸ்டா மகா கும்பாபிசேகம்




 வி.சுகிர்தகுமார்                   


 பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தான வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் சமாதிநிலை திருவுருவச்சிலை பிரதிஸ்டா மகா கும்பாபிசேகம் இன்று (13) 7.10 முதல் 8.13 வரையுள்ள சுபநேரத்தில் இடம்பெற்றது.
11 ஆம் திகதி கர்மாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான கும்பாபிசேக கிரியைகளானது நேற்று இடம்பெற்ற எண்ணெய்க்காப்பு சாத்தும் வழிபாடுகள் இன்று இடம்பெற்ற கும்பாபிசேகம் 25 ஆம் திகதி இடம்பெறும் மண்டல  பூர்த்தி சங்காபிசேகத்துடன் நிறைவுறும்.
கிரியைகள் யாவும் பிரதிஸ்டா பிரதமகுரு வித்தியாசகாரர் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்கள் தலைமையிலான குருமார்களும் சாதகாசிரியராக சாதகவேந்தன் சிவஸ்ரீ கணேச திவிசாந்தக்குருக்கள் உள்ளிட்டவர்கள் நாடத்திவைத்தனர்.
நடைபெற்ற ஏககுண்டயாக பூஜையினை தொடர்ந்து கலசத்திற்கான கும்பம் சொரியும் பக்தி பூர்வமான நிகழ்வு பெருந்திரளான பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் நடைபெற்றது.
 பின்னர் பிரதான கும்ப வெளி வீதி உலா நடைபெற்று சித்தானைக்குட்டி சுவாமிகளின் சமாதிநிலை திருவுருவச்சிலைக்கு கும்பம் சொரியப்பட்டதுடன் பூஜைகளும் நடைபெற்றது.
கும்பாபிசேக கிரியைகளில் பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான நிருவாகத்தினர் பக்தர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேநேரம் தொழிலதிபர் பா.குமுதராஜின் ஏற்பாட்டில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




No comments