மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்னொழுக்கினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தீ விபத்தில் எக்ஸ்ரே பிரிவிலிருந்த இயந்திரங்கள், மின்னுபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அதீத முயற்சிகளை மேற்கொண்ட மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், முன்னேற்பாடுகளை மேற்கொண்ட ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளின் செயலாளர்கள், களத்தில் பணியாற்றிய மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை ஆகியோருக்கு நன்றிகள்.
No comments