சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
( வி.ரி.சகாதேவராஜா)
எதிர்வரும் சித்ரா பௌர்ணமியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடும் மலையில் அபூர்வ மூலிகைகளிலான ஒரு அற்புதமான குபேர மகா வேள்வி நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது .
இம் மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று இந்த மாபெரும் வேள்வியினை செய்ய இந்தியாவில் இருந்து ஒரு மாபெரும் குபேரயோகி, குபேர குருஜி ஸ்டார் ஆனந்த் ஐயாஅவரது குழுவினருடன் வருகை தரவிருக்கிறார்.
இந்த அற்புதமான மகா யாகத்தில் கலந்து கொள்ள வருமாறு சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ அழைப்பு விடுக்கிறார்.
அவர் கூறுகையில்..
சித்தர்களுக்கே உரித்தான ஒருநாள் சித்தர் பௌர்ணமி என்ற சித்ரா பௌர்ணமி நாள். அன்றைய தினம் எல்லா சித்தர்களும் வருடத்தில் ஒரு தடவை இந்த பூமிக்கு வரும் நாள்.
இவ்வருடம் அது எதிர்வரும் 12/06/2025 திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று வருகிறது.
அன்று இரவில் இலங்கையில் சித்தர்கள் வாழும் வேலோடும் மலையில் பதினெண் சித்தர்கள் சன்னிதியில் அபூர்வ காய கல்ப மூலிகைகளை கொண்டு ஒரு மாபெரும் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.
இந்தியாவில் இருந்து ஒரு மாபெரும் குபேரயோகி, குபேர குருஜி அவர்கள் அவரது குழுவினருடன் வருகை தருகிறார்.
அத்துடன் எல்லோருக்கும் அதிசூட்சமமான தன யோக ஆகர்சண குபேர சங்கல்பத்தை செய்து சக்தி வாய்த்த குபேர தீக்ஷையும்~ தருகிறார்.
இந்த அற்புதமான சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாட்டிற்கு எல்லோரையும் அழைக்கிறோம். என்றார்.
No comments