சாமர சம்பத்தின் பிணையை இரத்து செய்யுமாறு கோரிக்கை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய புதிய ஜனநாயக முன்னணி (NDF) கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்யுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துகைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துகைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக இல்லாமையால் சாமர சம்பத்தின் பிணையை இரத்து செய்யுமாறு முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
No comments