வயலுக்குச் சென்ற வயோதிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
அநுராதபுரம் மாவட்டத்தில் கல்நேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியமெட்டியாவ பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கல்நேவ, தியமெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடையவர் ஆவார்.
இவர் நேற்றைய தினம் தனது வயலுக்குச் சென்றுள்ள நிலையில் மின்சார இயக்கியின் உதவியுடன் தண்ணீரை பெற்றுக்கொள்ள முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் நேகம்பஹ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments