Column Left

Vettri

அகரத்தின் பெளர்ணமி கலை விழா

 செ.துஜியந்தன்


அகரம் கலைக்கழகத்தின் பெளர்ணமி கலைவிழா அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் அகரம் பிரதேச இணைப்பாளர் சிரேஷ்ட கலைஞர் சாந்தலிங்கம் தலைமையில் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அகரம் ஆலோசகர் ஓய்வுநிலை அதிபர் இராசரெத்தினம்,  அகரம் அமைப்பின் தலைவர் துஜியந்தன், பொருளாளர் முரளிதரன் உட்பட புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் பொதுநல அமைப்புகள், ஆலயங்களின் நிர்வாக சபையினர், இளைஞர் யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள், தனிபர் திறனை வெளிப்படுத்தும் பாடல், ஆடல் ஆகியன நடைபெற்றது.

அம்பாறை அகரம் கலைக்கழகத்தினால்  மறைந்திருக்கும் இளங்கலைஞர்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் வகையில்  கலை நிகழ்வுகள், மற்றும் மாணவர்கள் மத்தியில் கவிதை, சிறுகதை, கூத்து பயிற்சி பட்டறைகள்  உட்பட பல்வேறு கலைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









No comments