Column Left

Vettri

Breaking News

இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!!




 சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. 

இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஒத்திகைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, குறித்த பகுதியில் இன்று முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி, கருவாத்தோட்டம் - விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தைக்கான நுழைவாயில், பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில், ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து இலங்கை மன்ற கல்லூரி வீதிக்கான நுழைவாயில் ஆகியன தற்காலிகமாக மூடப்படவுள்ளது. 

அத்துடன் ஒத்திகை காலத்தில் ஹோட்டன் பிளேஸில் இருந்து சுதந்திர சதுக்கம் ஊடான மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில் மூடப்படும் என தெரிவித்துள்ளது


No comments