Column Left

Vettri

Breaking News

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் !







மாளிகைக்காடு செய்தியாளர்

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். லத்தீப் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்ஏ.ஆதம்பாவா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர், எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் திணைக்கள தலைவர்கள், பிரதேச அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது ஆக்க பூர்வமான கருத்துக்களையும் முன்வைத்தனர்.

இறுதியாக நிந்தவூர் பிரதேச எல்லைக்குட்பட்ட சிறந்த திட்டங்களை மக்களின் தேவை கருதி பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஏ.ஆதம்பாவா அவர்கள் பிரதேச செயலாளருக்கும், உரிய திணைக்கள தலைவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் சில செயற்திட்டங்களை மக்களுக்காக உரிய அமைச்சுகளூடாக இப்பிரதேசத்திற்கு கொண்டுவருவதாகவும் சபையில் தெரிவித்தார்..

No comments

Subscribe Us