Column Left

Vettri

Breaking News

வேலோடுமலையில் இருந்து கதிர்காமம் நோக்கிய 13 நாள் வேல்யாத்திரை ஆரம்பம்





( வி.ரி. சகாதேவராஜா)
 மட்டக்களப்பு சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடுமலை முருகனாலயத்தில் இருந்து ஆலய தலைவர் முருக பக்தர் முருகஸ்ரீ சு.தியாகராஜா தலைமையில் கதிர்காமம் நோக்கிய 13 நாள் வேல் பாதயாத்திரை வியாழக்கிழமை (13) ஆரம்பமாகியது.

வியாழக்கிழமை காலை முருக பெருமானின் வேல்சாமிகளாக வேலோடுமலை முருகஸ்ரீ தியாகராஜ சுவாமிகளிடம் சிவயோகி நமசிவாய சுவாமிகள் முன்னிலையில் காரைதீவு வேல்சாமிகளினால் சிறப்பு வேல் பூஜை நடைபெற்று வேல் வாங்கும் படலம் வேலோடு மலையில் சிறப்பாக நடைபெற்றது.

 வேலோடுமலையில் இருந்து கதிர்காம கந்தனின்  வேலோடு அரோஹரா கோசம் முழங்க பாதயாத்திரை ஆரம்பமாகியது.
அன்றிரவு இரவு மயிலம்பாவளியில் தங்கினார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை
காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை தரிசித்த அவர்கள் குருக்கள் மடத்தில் தங்கினர்.

நாளை 14/06/2025 சனிக்கிழமை;
காலை களுதாவளை. 
இரவு - பாண்டிருப்பில் தங்குவார்கள்.

நாளை மறுநாள் 15/06/2025 ஞாயிற்றுக்கிழமை;
காலை - காரைதீவு.
இரவு - அக்கரைப்பற்றில் தங்குவார்கள்.
16/06/2025 ஆம் தேதி திங்கட்கிழமை;
காலை - திருக் கோவில். 
இரவு - சங்கமான் கண்டி.மறுநாள்
17/06/2025 செவ்வாய்க்கிழமை;
காலை - கோமாரி, ஊரணி. 
இரவு - பொத்துவில்.
18/06/2025 புதன்கிழமை;
காலை - நாவலாற்றும் பாலம். 
இரவு - பாணமை.
19/06/2025 வியாழக்கிழமை;
காலை - பாணமை.
இரவு - சன்னியாசி மலை.
20/06/2025 வெள்ளிக்கிழமை;
காலை - உகந்தை மலை முருகன் ஆலயத்தை அடைவார்கள்.

மறுநாள் 21 ஆம் தேதி சனிக்கிழமை சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில் அங்கிருந்து வழமை போல்  கதிர்காமம் நோக்கி கானகப்பாதையில் பிரவேசிப்பர்.

 26ம் திகதி கதிர்காம கொடியேற்றத்திற்கு வேல் ஒப்படைக்கப்படும் என்று சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் தெரிவித்தார்.










 
 

No comments

Subscribe Us