Column Left

Vettri

Breaking News

அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்!




 வடமேற்கு, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது.

இதனடிப்படையில் அடுத்த ஆண்டு (2027) ஜூலை மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.



தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கூட்டத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் (NPP) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்

இதனடிப்படையில் வரும் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.


இந்தநிலையில் வரவிருக்கும் தேர்தலை இலக்காகக் கொண்டு மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளைத் தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் அல்லது முறைகேட்டுக் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை உறுதிசெய்து அவர்களைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.


தூய்மையான அரசியல் வரலாற்றைக் கொண்ட தகுதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேசிய மக்கள் சக்தியின் சின்னத்தின்க கீழ் போட்டியிட வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போது நீண்டகாலமாகத் தள்ளிப்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவுபடுத்துமாறு தெரிவித்திருந்தார்.


இதனடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பகிர்வை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாகச் நடைமுறைப்படுத்துவதிலும் ஜனநாயகக் கட்டமைப்பை மீண்டும் நிலைநாட்டுவதிலும் இந்தியா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.

2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் சட்டமும், தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக இத் தேர்தல்கள் நடத்தப்படாமல் முடங்கிக் கிடந்தன

இந்தநிலையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இன்றி கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாகாணங்கள் ஆளுநர்களின் (Governors) நிர்வாகத்தின் கீழேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Subscribe Us