25 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவராகத் தெரிவாகி ஜெர்மனி நாட்டுக்குப் பயணமாகும் காரைதீவு மாணவன்!
25 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவராகத் தெரிவாகி ஜெர்மனி நாட்டுக்குப் பயணமாகும் காரைதீவு மாணவன்!
காரைதீவு மண்ணுக்கும், கமு/கமு/ சண்முகா மகா வித்தியாலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவன் ஜஸ்விகன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
பொறியியலாளர் சுரேந்திரகுமார் நாகநந்தினி அவர்களின் சிரேஷ்ட புதல்வனான ஜஸ்விகன், Sri Lanka Unites (SLU) Leadership Programme ஊடாக இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவராகத் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இந்தச் சிறப்புமிக்க வாய்ப்பின் மூலம், ஜஸ்விகன் உள்ளிட்ட மூன்று மாணவர்களும் நாளை ஜெர்மனி நாட்டுக்குப் பயணமாகவுள்ளனர்.
இவரது இச்சாதனை எமது பாடசாலைக்கும், பெற்றோருக்கும், காரைதீவு மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு மகத்தான தருணமாகும். இவரது வெற்றிப் பயணம் மேலும் பல உயரங்களைத் தொடவும், புதிய அனுபவங்களையும் அறிவையும் பெற்றுத் தாயகம் திரும்பவும் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments