Column Left

Vettri

Breaking News

திங்கட்கிழமை சில தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை




 நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்களால், மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ள இந்த விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us