திருமலை நவம் எமுதிய " இராவணன் கோட்டம்" வரலாற்று நூல் திருகோணமலையில் வெளியீட்டு விழா..!
திருமலை நவம் எமுதிய " இராவணன் கோட்டம்" வரலாற்று நூல் திருகோணமலையில் வெளியீட்டு விழா..!
(சேனையூர் நிருபர்)
திருகோணமலைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த எமுத்தாளர் திருமலை நவம் அவர்கள் எமுதிய " இராவணன் கோட்டம்" கன்னியா தொடர்பான தொல்லியல் ஆய்வு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (31) காலை 9.30 மணிக்கு திருகோணமலை மாநகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் திருகோணமலைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் கவிஞர் க . யோகானந்தன் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் அருளுரைகளை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு வேதாகமமாமணி சோ. இரவிச்சந்திரக்குருக்கள் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி. கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் நிகழ்த்தினர் இவர்களுக்கு நூலின் முதல் பிரதிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் முதன்மை அழைப்பாளராக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நா. மணிவண்ணன் அவர்களும் மேன்மை அழைப்பாளராக பிரபல தொழில் அதிபரும் I.B.C தமிழ் ஊடகத்தின் நிறுவனருமான க . பாஸ்கரனும் , கெளரவ அழைப்பாளராக நீங்களும் எமுதலாம் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் வரவேற்புரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் அ . அச்சுதன் வழங்க நூல் அறிமுகத்தினை சட்டத்தரணி திருமதி. உதயகுமார் பிரசாந்தினி நிகழ்த்தினார் ஆய்வுரையை பேராசிரியர் வ . குணபாலசிங்கம் வழங்கினார்.
நூல் வெளியீட்டுரையை மகுடம் வி. மைக்கல் கொலின் வழங்க ஏற்புரையை நூல் ஆசிரியர் திருமலை நவம் வழங்கினார் .நன்றியுரையை திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திருமலை சி. காண்டீபன் நிகழ்த்தினார் நிகழ்ச்சித் தொகுப்பை கல்யாணி நவரெட்ணம் மிகவும் சிறப்பாக வழங்கினார்.

No comments