Column Left

Vettri

Breaking News

ஞானசார தேரரின் விடுதலை - சாகும் வரை கஸ்ஸப தேரர் உண்ணாவிரதப் போராட்டம்




 பலாங்கொடைகஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

நேற்று ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (12) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அநுராதபுர புனித பூமியின் அபிவிருத்தித் திட்டத்தை நிறுத்துமாறும் வலியுறுத்தி, பலாங்கொடைகஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் நேற்று (11) சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் எவ்வித உணவோ அல்லது நீர் ஆகாரமோ அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.


நேற்று இரவும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற தேரர்கள் மற்றும் பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.  

No comments

Subscribe Us