விமல் வீரவன்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று காலை (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் தாக்கல் செய்த முறைப்பாடு, இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்கில் விமல் வீரவன்ச ஒரு பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும் அவரது சட்ட ஆலோசகர் இன்று அவர் சார்பாக வாதங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments