Column Left

Vettri

Breaking News

ஜனாதிபதியை படுகொலை செய்ய பாரிய சதி: கஸ்ஸப்ப குழுவின் சாபக்கவியால் சர்ச்சை




 ஜனாதிபதியின் உருவபொம்மையைச் செய்து, அதற்கு முட்களால் குத்தி, தலை ஏழெட்டாகப் பிளக்க வேண்டும் என சாபக்கவி பாடியமையானது வெறும் சாதாரண சம்பவமல்ல எனவும் இது ஒரு பாரதூரமான செயல் என்றும்  பாரிய குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுளது.

இலங்கை காவல்துறையை அரசியலிலிருந்து விடுவிக்கும் தேசிய அமைப்பின் தலைவர் அஜித் தர்மபாலவால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்கான பாரிய சதித்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையே, அநுர குமார திசாநாயக்கவின் உருவபொம்மைக்கு முட்களால் குத்தி சாபக்கவி பாடிய சம்பவம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,


துப்பாக்கிச் சூடு நடத்தியோ அல்லது குண்டுத் தாக்குதல் நடத்தியோ ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கான பின்னணி இதன் மூலம் உருவாக்கப்படுகிறது

இது ஜனாதிபதியைப் படுகொலை செய்யும் அரசியல் சதித்திட்டத்தின் முதல் படியாகும்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய இத்தகைய செயற்பாடுகளை அரசாங்கம் சாதாரணமாகக் கருதக் கூடாது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

No comments

Subscribe Us