Column Left

Vettri

Breaking News

தமிழர் பகுதியில் ஆசிரியருக்கு நடந்த சம்பவம் ; முன்னணிப் பாடசாலையில் மாணவன் செய்த செயலால் பரபரப்பு




 திருகோணமலையில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில், பரீட்சைக்கு தாமதமாக வந்ததற்காக 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், தன்னை எச்சரித்த ஆசிரியரை மிகக் கொடூரமான முறையில் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சை தேர்வுகளின் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் அளித்த முறைப்பாட்டின்படி, பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் எச்சரித்துள்ளார்

.தாக்குதலுக்கு பின்னர் மாணவன் தப்பியோட்டம் இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன்,பரீட்சை அறைக்குள்ளேயே வைத்து ஆசிரியரின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தச் சம்பவம் குறித்து திருகோணமலை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவனைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்

.குழு தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர், திருகோணமலை மத்திய காவல் நிலையத்தில் இது குறித்து அதிகாரபூர்வமாகப் முறைப்பாடு அளித்துள்ளார்


இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவனைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் பிரத்தியேகக் குழு ஒன்றை நியமித்துள்ளனர்.   

No comments

Subscribe Us