Home
/
Unlabelled
/
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு!
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு!
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு!
பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களையும் கௌரவிக்க சம்மாந்துறை பிரதேச சபை தீர்மானம்
தில்சாத் பர்வீஸ்
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையின் RCC அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்கவுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்களுக்கு உதவும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபையினால் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை MUFO Cricket Academy-யைச் சேர்ந்த ஹம்தான், இஸ்பாக், சாஹித் ஆகிய மூன்று வீரர்களும் Riches Lanka Center for Cricket (RCC) ஊடாகத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை RCC அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் இம்மாதம் இந்தியாவின் ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 2027 ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கு நிதியுதவி கோரி MUFO விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம், சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வில் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இன்று (10) தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குறித்த இளம் வீரர்களின் சர்வதேசப் போட்டிப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நிதியுதவி வழங்குமாறு தவிசாளர் கோரிக்கை முன்வைத்தார்.
இதற்கமைய, உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த்,பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், வி.ஜெயசந்திரன், ஏ.சீ.எம்.நயீம், எம்.ஐ.எம்.றிஸ்விகான், எம்.ஆர்.ஆசிக் முகம்மட், பஹ்மி சுலைமான், ஏ.எச்.எம்.காலித், ஹாதிக் இப்ராஹிம், ஏ.எல்.எம்.ஜிப்ரி மற்றும் எஸ்.எல்.ஏ.நசார் ஆகியோர் இக்கோரிக்கைக்கு ஆதரவாகத் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மூன்று வீரர்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.
பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கவும் தீர்மானம்
இதேவேளை, கடந்த பல்கலைக்கழக அனுமதித் தெரிவில் தொழில்நுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிப்பதற்கும் சபையில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், ஏனைய கல்வித் துறைகள் ஊடாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் பிரதேச சபைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு, அதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது.
சர்வதேச விளையாட்டுத் துறையில் சாதிக்க முயற்சிக்கும் இளம் வீரர்களையும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களையும் ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச சபை முன்னெடுத்துள்ள இத்தீர்மானங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு!
Reviewed by Thakzani
on
11/11/2026 02:30:00 PM
Rating: 5
Reviewed by Thakzani
on
11/11/2026 02:30:00 PM
Rating: 5

No comments