அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள பாரியளவு பணம்.. நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
அரசுக்குச் சொந்தமான பிரதான அரச நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 259.3 பில்லியன் ரூபாய் மொத்த இலாபத்தைப் பதிவுசெய்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்ட 2026 இடைக்கால நிதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (ரூபாய் 227.8 பில்லியன்) ஒப்பிடுகையில், இது சுமார் 13.8 வீத (ரூ. 31.5 பில்லியன்) அதிகரிப்பாகும்.
அதன்படி, இலங்கை வங்கி 62.7 பில்லியன் ரூபாய், மக்கள் வங்கி ரூ. 32.6 பில்லியன் ரூபாய், தேசிய சேமிப்பு வங்கி, துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவை பிரதான இலாபம் ஈட்டிய நிறுவனங்களாக திகழ்கின்றன.
இருப்பினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலப்பகுதியில் 35.6 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்ததுடன், லங்கா சர்க்கரை நிறுவனம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை போன்றவையும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளன.
அத்துடன் மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை தணிக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 41 பில்லியன் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நஷ்டத்தில் இயங்கும் 33 நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கைகளை 2026 மார்ச்சில் அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு பிரிவு முன்னெடுத்து வருகிறது.

No comments