Column Left

Vettri

Breaking News

நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு




 தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் விநியோக நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய தேவையில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

லங்கா ஐ.ஓ.சி., சினோபெக் மற்றும் ஆர்.என். பாக் ஆகிய தனியார் நிறுவனங்கள் தமக்கு ஏற்படும் நட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தை குறைத்துள்ளன.

இதன் காரணமாக சில பகுதிகளில் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்புகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.


இதன்படி, விநியோகஸ்தர்களுக்கு கடன் வசதிகள் விரிவாக்கப்பட்டு, சந்தை பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இல்லாத 52 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகத்தை சீர்செய்ய அமைச்சின் செயலாளரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


எனவே கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் வரிசைகளில் நிற்க வேண்டிய தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். 


No comments

Subscribe Us