Column Left

Vettri

Breaking News

நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு




 நாட்டில் நிலவும் பருவப்பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 7,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 300 பேர் உயிரிழப்பதாகவும், இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் என்பது பக்டீரியா மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோயாகும். குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

No comments

Subscribe Us