Column Left

Vettri

Breaking News

வெளிநாட்டு மற்றும் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.!




 வெளிநாட்டு மற்றும் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.!


(சேனையூர் நிருபர்) 


கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டு நிதி மற்றும் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 2026ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான விசேட கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் இன்று (17.11.2026) திருகோணமலையில் அமைந்துள்ள பிரதம செயலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.



இதன்போது, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், திட்டங்களைச் செயல்படுத்தும்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் மற்றும் தடைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


அத்துடன், குறித்த தடைகளை நிவர்த்தி செய்து, திட்டமிடப்பட்ட காலப்பகுதிக்குள் அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.


விசேட திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது துறைவாரியாக மீளாய்வு செய்யப்பட்டது.


கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக திட்டங்களை வினைத்திறனுடனும் உரிய காலத்திலும் நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியத்தையும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.



No comments

Subscribe Us