Column Left

Vettri

Breaking News

பாழடைந்த கிணற்றுக்குள் கிடந்த சடலம் - 17 வயது யுவதி உட்பட மூவர் சிக்கிய பரபரப்புப் பின்னணி!




 பாழடைந்த கிணற்றுக்குள் கிடந்த சடலம் - 17 வயது யுவதி உட்பட மூவர் சிக்கிய பரபரப்புப் பின்னணி!


அநுராதபுரம் - ஹொரவபொத்தானை பகுதியில் பாழடைந்த விவசாயக் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், 17 வயது யுவதி உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி, இஹலகும்புக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த நபரொருவரின் சடலம் அப்பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தது.


துப்புத் துலக்கிய பொலிஸார்

இந்த மரணம் தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த நபர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டனர்.


இதன் பலனாக, நேற்றைய தினம் (15) 17 வயதுடைய யுவதி ஒருவரும், 23 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மூவரும் இஹலகும்புக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அதே பகுதியிலேயே வைத்து பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.


இந்தக் கொலைக்கான பின்னணி என்ன? சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது? மற்றும் கைதான சந்தேகநபர்களுக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையிலான தொடர்பு என்ன? என்பது குறித்த மேலதிக விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் 

No comments

Subscribe Us