சம்மாந்துறையின் புதிய அடையாளமாக மிளிரும் “SAMMANTHURAI” நினைவுச் சின்னம்!!!!
(சம்மாந்துறை – மின்மினி மின்ஹா)
சம்மாந்துறை பிரதேச சபை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான “SAMMANTHURAI” அடையாளச் சின்னம் (Landmark) நேற்று (03) சனிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வடையாளச் சின்னம், சம்மாந்துறையின் வரலாற்றுப் பெருமை, தனித்துவம் மற்றும் பிரதேசத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் நவீன கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் ஒளிவெள்ளத்தில் மிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச் சின்னம், பிரதேச சபை வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் விருந்தினர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அத்துடன், சம்மாந்துறை பிரதேசத்தின் அழகிய தோற்றத்தை மேம்படுத்துவதுடன், சம்மாந்துறையின் பெயரையும் தனித்துவமான அடையாளத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான அடையாளச் சின்னமாகவும் இது அமையவுள்ளது.
இந்நிகழ்வில் கௌரவ தவிசாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபைச் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
No comments