Column Left

Vettri

Breaking News

🏆 கல்விச் சேவைக்கு கிடைத்த கௌரவம்! விநாயகபுரம் மகாவித்தியாலய அதிபர் பே. ஜெயகாந் அவர்களுக்கு ‘குரு பிரதீபா பிரபா 2026’ விருது!!!




அம்பாறை, ஒக்டோபர் 04: ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ/விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு. . ஜெயகாந் அவர்களுக்கு, கல்விச் சேவையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ‘குரு பிரதீபா பிரபா 2026’ விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கௌரவிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் முக்கியமான விருதாக ‘குரு பிரதீபா பிரபா’ விருது அமைந்துள்ளது. அந்த வகையில், தனது நீண்டகால கல்விச் சேவையின் ஊடாக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கியுள்ள திரு. பே. ஜெயகாந் அவர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், தம்பிலுவில் மண்ணின் மைந்தரான திரு. பே. ஜெயகாந் அவர்கள் இவ்வாறு தேசிய மட்டத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளமை தம்பிலுவில் மற்றும் விநாயகபுரம் திருக்கோவில் பிரதேச மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது. ‘குரு பிரதீபா பிரபா 2026’ விருதைப் பெற்றுள்ள விநாயகபுரம் மகாவித்தியாலய அதிபர் திரு. . ஜெயகாந் அவர்களுக்கு பாடசாலை சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

No comments

Subscribe Us