Column Left

Vettri

Breaking News

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற கல்வி சார் விளையாட்டு போட்டி நிகழ்வுகள்!!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் நடப்பு ஆண்டிற்கான மாணவர்களின் உள்ளக கல்விசார் மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக அதிபர் எம் ஏ பீ எம் முபாசில் (உஸ்மானி ) தலைமையில் கல்லூரியில் மிக விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது மாணவர்களின் கலை, இலக்கியம், நாவன்மை, ஆக்கத்திறன், தலைமைத்துவப் பண்புகள், சிந்தனைத் திறன் போன்ற பன்முக திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருநத இப் போட்டி நிகழ்வின் நடுவர்களாக புத்தளம் கதீஜா மகளிர் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அஸீம் ( ரஹ்மானி ), புத்தளம் பாகியாதுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஆதிப் ( ரஹ்மானி ), மாவனல்லை அஷ் ஷிபா மகளிர் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் தாபில் ( ரஹ்மானி ), கற்பிட்டி பாத்திமா மகளிர் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் மிக்தாத் ( ரஹ்மானி ) கற்பிட்டி தில்லையூர் தாருல் அர்கம் பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ரிப்கான் ( ரஹ்மானி ) மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு நடுவர்களாக அஷ்ஷெய்க் ஃபரீத்கான் ( ரஹ்மானி ), அஷ்ஷேக் இர்ஷாத் ( ரஹ்மானி ) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கற்பிட்டி ரஹ்மானிய்யா மதுரஸா மாணவர்கள் ஜமாலிய்யா, கமாலிய்யா.ஸலாமிய்யா மற்றும் பலாஹிய்யா என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு அந்த அணிகளை வழிநடத்துவதற்கான மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டன அவர்கள் தமது அணிகளின் ஒற்றுமை, ஒழுக்கம், உற்சாகம் மற்றும் சிறந்த பங்கேற்பை உறுதி செய்யும் முக்கியப் பொறுப்பை ஏற்று மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அணியின் பயிற்றுவிப்பாசிரியர்கள் போட்டியாளர்களை ஒருங்கிணைத்து, போட்டிகளில் சிறந்த முறையில் பயிற்றுவித்து பங்கேற்கச் செய்ததுடன், சகோதரத்துவம், ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்த வழிகாட்டியமையும் முக்கிய அம்சமாகும்

No comments

Subscribe Us