Column Left

Vettri

Breaking News

கதிர்காம யாத்திரை நாயைத் தாக்கிய இளைஞனுக்கு 100 ரூபா அபராதம்: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு! 3 மாதச் சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைப்பு!!




பாறுக் ஷிஹான்

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற 'சுப்பிரமணியம்' என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளதுடன், அவருக்கு 100 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து, கல்முனை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், 2026 ஜூன் 28 ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது, சந்தேகநபர் 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு அண்மையில் (செப்டம்பர் 07) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் மன்றில் ஆஜரானார்.

இதன்போது, சுப்பிரமணியம் என்ற நாயைத் தாக்கிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சந்தேகநபருக்கு 100 ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்தும்   நீதவான் தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைச் செலுத்தியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

No comments

Subscribe Us