தேசிய சமுத்திர வளங்கள் வாரத்தை முன்னிட்டு கடற்படையினரால் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வு!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
"க்ளீன் ஸ்ரீ லங்கா" செயலகமும் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்யும் 'தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரம்' தேசியத் திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்களின் தொடர் புதன்கிழமை (2026 செப்டம்பர் 23) கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் தென்கிழக்கு கடற்படைக் கட்டளைகளை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்டது.
அதற்கமைய, கிழக்கு கடற்படைக் கட்டளையினால் திருகோணமலை கொட்பே கடற்கரைப் பகுதியிலும், வடக்கு கடற்படைக் கட்டளையினால் பருத்தித்துறை தொண்டமானாறு கடற்கரைப் பகுதியிலும், வடமத்திய கடற்படைக் கட்டளையினால் மன்னார் நடுக்குடா கடற்கரைப் பகுதியிலும் மற்றும் தென்கிழக்கு கடற்படைக் கட்டளையினால் அம்பாறை அக்கறைப்பற்று கடற்கரைப் பகுதியிலும் மையமாகக் கொண்டு இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கான சமுதாய சேவைப் பங்களிப்பை ஏனைய தரப்பினருடன் இணைந்து கடற்படையினர் வழங்கினர்.
No comments