அனோஜன் விடுதலைக்காக ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பை கோரியுள்ள தமிழரசுக்கட்சி!!
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 26 வயதான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரை பாதுகாப்பாக விடுதலை செய்வதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
இதுதொடர்பில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றை நடத்துமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் செப்டெம்பர் 22ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
மேலும், வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்த சவூதி அரேபியாவுக்கான பிரதிநிதிகள் குழுவில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கே. கோடீஸ்வரன் கட்சியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த சில நாட்களாக, தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அனோஜனின் வழக்கு தொடர்பான தகவல்களை விளக்கியதுடன், அவரின் விடுதலைக்கான முயற்சிகளுக்கு ஆதரவு கோரியுள்ளனர்.
அதேவேளை, நெருக்கமாகச் செயற்படும் புலம்பெயர் அமைப்புகளும் தாங்கள் செயற்படும் நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை அணுகி, இராஜதந்திர மற்றும் மனிதாபிமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
எனவே, ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்து, சவூதி அரேபிய அதிகாரிகளுடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய நட்பு நாடுகளின் உதவியைப் பெறுவது உள்ளிட்ட குறிப்பிட்ட முன்மொழிவுகளை முன்வைக்கப்பட்டது
அனோஜனின் விடுதலைக்காக அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்
No comments