Column Left

Vettri

Breaking News

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 898 கிலோ பீடி இலைத் தொகுதியை கைப்பற்றிய கடற்படை




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினர், புத்தளம் மற்றும் நீர்கொழும்பு களப்புப் பகுதிகளைச் சூழவுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (2026 செப்டம்பர் 27) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட எண்ணூற்று தொண்ணூற்றெட்டு (898) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியைக் கைப்பற்றினர். வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தினால் புத்தளம் களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, களப்பு பகுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான இருபது (20) உறைகளில் அடைக்கப்பட்டிருந்த எழுநூற்று நாற்பத்தாறு (746) கிலோகிராம் பீடி இலைத் தொகுதியை​ மேற்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் களனி நிறுவனத்தினால் நீர்கொழும்பு களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நான்கு (04) உறைகளிலிருந்த நூற்று ஐம்பத்திரண்டு (152) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி உட்பட, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட எண்ணூற்று தொண்ணூற்றெட்டு (898) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு சட்டத்தின் பிடியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்நடவடிக்கைகளின் போது சட்டத்தின் பிடியில் பெறப்பட்ட பீடி இலைத் தொகுதியை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திலும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments

Subscribe Us