கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தில் சங்கமித்த புத்தளம் கிரியேட் இலக்கிய வட்ட உறவுகள்!!!!
புத்தளம் கிரியேட் இலக்கிய வட்ட உறவுகள் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் உறவுகளுடனான சிநேகபூர்வ சந்திப்பிற்காக சனிக்கிழமை (26) பௌர்ணமி தினத்தன்று கற்பிட்டிக்கு விஜயம் செய்தனர்
கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் எஸ் எம் அரூஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் சிநேகபூர்வ சந்திப்பில் புத்தளம் கிரியேட் இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ் ஏ சீ பி மரைக்கார் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
இரு இலக்கிய வட்ட உறவுகளுடனான சந்திப்பின் போது கற்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய இரு பிரதேசங்களின் கலை இலக்கிய செயற்பாடுகளின் தற்போதைய நிலை அதனை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு மேற் கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இரு இலக்கிய உறவுகளினதும் பங்களிப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் மேலும் புதிய தலைமுறையினரின் இலக்கிய ஆர்வத்தை வெளிக்கொண்டு வருவதற்கான வழி முறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் உண்மையான திறமைசாலிகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமைகள் என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது
மேலும் இச் சிநேகபூர்வ சந்திப்பின் போது இரு இலக்கிய உறவுகளின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் சகலரும் தமது சுய ஆக்கங்களை சபையோர் முன்னிலையில் வெளிக்காட்டி சகலரதும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர் அத்தோடு ஊடகத்துறையில் கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களாக சாதனை புரிந்து வருபவரும் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் செயலாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் எச் எம் சியாஜ் இரு இலக்கிய உறவுகளின் தலைவர்களினால் நினைவுச் சின்னம் மற்றும் பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் அத்தோடு புத்தளம் கிரியேட் இலக்கிய வட்ட உறவுகளுக்கு கற்பிட்டியில் வெளியிடப்பட்ட பனை வீரன் மற்றும் தில்லைமலர் ஆகிய இரண்டு நூல்களும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
No comments