இன்று அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி சித்தர் ரதபவனி!!
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவள விழா குருபூசையை முன்னிட்டு காரைதீவு முதல் பனங்காடு வரையிலான சித்தர் ரதபவனி இன்று (04.07.2026) சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
75 வது பவளவிழா அன்னதான நிகழ்வு எதிர்வரும் 22.07.2026 அன்று நடைபெறவுள்ளது.
இன்று காலை 7.00 மணிக்கு காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் இருந்து பூஜைகள் சகிதம் ரதபவனி ஆரம்பமாகியது.
சுமார் 15 அலங்கரிக்கப்பட்ட உழவு இயந்திரங்களில் சித்தர்கள் இந்த ரதபவனியில் பங்கேற்றனர்.
ரதபவனி அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கோளாவில் வழியாக பனங்காடு வரை பயணித்தது.
இதேவேளை அக்கரைப்பற்றில் சுமார் 500 பக்தர்களின் இந்த ரதபவனியுடன் இணைந்தனர்.
No comments