பழுகாமத்தில் மஹா கும்பாபிஷேகம்.!!
வி.ரி.சகாதேவராஜா
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் ( 24 & 25 -06-2026) புதன், வியாழன்)காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்துதல் இடம்பெற்றது.
இன்று (26 .06.2026) வெள்ளிக்கிழமை- கும்பாபிஷேகம் அதிகாலை 3.00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை ஆரம்பமாகி, காலை 7.12 மணி முதல் 7.56 மணிக்குள் அமைந்துள்ள சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்படும்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மண்டலாபிஷேகப் பூஜைகள் இடம் பெற்று (19.07.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 1008 சங்கபாபிஷேகத்துடன் சுவாமி வீதியுலாவும் நடைபெறும்.
இவ்விழா சிவஸ்ரீ மூ. த. சச்சிதானந்தமூர்த்திக் குருக்கள், சிவஸ்ரீ க. கு. சீதாராம குருக்கள் மற்றும் சிவஸ்ரீ க. கு. சச்சிதானந்தசிவம் குருக்கள் ஆகியோரின் தலைமையில் ஆன்மீக நெறிமுறைகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.
No comments