Column Left

Vettri

Breaking News

சாம்பியனாக மின்னிய Revenges இன் மகளிர் அணி!!! BBL கிரிக்கெட் போரில் வெற்றியின் புதிய வரலாறு




சாம்பியனாக மின்னிய Revenges இன் மகளிர் அணி!!! BBL கிரிக்கெட் போரில் வெற்றியின் புதிய வரலாறு (தனோஷன்) 2011 உயர்தர மாணவர்கள் மற்றும் டைனமிக் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபக்கார்த்த கிண்ணம் ஆறாவது முறையாக Batch Battle League -2026 ஆம் ஆண்டுக்குரிய சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் கோலாகலமான முறையில் நேற்று(03) இடம்பெற்றது இவ்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு S.ஜெகராஜன் மற்றும் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேசசபை தவிசாளர் S.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் திரு A.P குணதிலக மற்றும் கல்முனை பிராந்திய உதவி போலீஸ் அத்தியட்சகர் திரு M.K இப்னு அசார் மற்றும் காரைதீவு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு R.I.B ஜெயரெத்ன மற்றும் விஷேட அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் மூன்று நாட்களாக இடம்பெற்ற இப்போட்டியில் எட்டு மகளிர் அணி கலந்து கொண்டது மூன்று தொடர் வெற்றிகளை தனதாக்கிக் கொண்ட ரிவெஞ்சர்ஸ் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தனர் இறுதிப் போட்டியில் ரிவெஞ்சர்ஸ் மகளிர் அணி மற்றும் றோயல் ப்ளாஸ்டர் மகளிர் அணி மோதியிருந்தது றோயல் பிளாஸ்டர் அணி முப்பத்து மூன்று ஓட்டங்களை பெற்றுக் கொண்டது இறுதியாக ரிவஞ்சர்ஸ் மகளிர் அணியினர் முப்பத்தாறு ஓட்டங்களை பெற்று வெற்றியினை பெற்றிருந்தனர் இப் போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர் விருதினை ரிவெஞ்சர்ஸ் மகளிர் அணி வீராங்கனை சதுக்கா பெற்றிருந்தார் கடந்த வருடம் சிறந்த அணியாக தெரிவு செய்யப்பட்ட ரிவேஞ்ர்ஸ் பெண்கள் அணி சிறந்த துடுப்பாட்டம்,களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சுகளை செவவ்வெனேயே மேற்கொண்டிருந்ததால் இம்முறை சாம்பியனாக ஆக தெரிவு செய்யபட்டது

No comments