Column Left

Vettri

Breaking News

BBL கிரிக்கெட் சுற்றுத்தொடரில் நான்காவது முறையாகவும் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த பயர் கோஸஸ் அணி!!!




BBL கிரிக்கெட் சுற்றுத்தொடரில் நான்காவது முறையாகவும் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த பயர் கோஸஸ் அணி!!! (தனோஷன்) 2011 உயர்தர மாணவர்கள் மற்றும் டைனமிக் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபக்கார்த்த கிண்ணம் ஆறாவது முறையாக Batch Battle League -2026 ஆம் ஆண்டுக்குரிய சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் கோலாகலமான முறையில் நேற்று(03) இடம்பெற்றது இவ்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு S.ஜெகராஜன் மற்றும் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேசசபை தவிசாளர் S.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் திரு A.P குணதிலக மற்றும் கல்முனை பிராந்திய உதவி போலீஸ் அத்தியட்சகர் திரு M.K இப்னு அசார் மற்றும் காரைதீவு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு R.I.B ஜெயரெத்ன மற்றும் விஷேட அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் மூன்று நாட்களாக இடம்பெற்ற இச்சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டிக்கு பையர் கோஸஸ் மற்றும் ஸ்கோப்பியன் அணி தெரிவாகியிருந்தது அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பயர் கோஸஸ் அணியினர் ஐம்பத்து இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர் 53 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடிப்படுத்திய ஸ்கோப்பியன் அணி ஐந்து ஓட்டங்களை இழந்து நாற்பத்து ஏழு ஓட்டங்களை பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தது இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை பயர் கோர்சஸ் அணி வீரர் சர்மிலகாந்த் பெற்றுக் கொண்டதுடன் சிறந்த பந்துவீச்சாளர் விருதை சனோசன் தனதாக்கிக் கொண்டார் ஆறு வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பிபிஎல் சுற்றுத்தொடரில் பயர் கோஸஸ் அணி நான்கு தடவைகள் சாம்பியனாவும் இரண்டு தடவைகள் ரன்னஸ் அப் ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments