Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை




சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை ஒன்று திசை மாறி வந்துள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் இன்று(7) காலை சுமார் 9 அடி நீளமும் மிகவும் பருமனுமான முதலை ஒன்று சிக்கியுள்ளதை அவதானித்தவர்கள் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த முதலையை உரிய முறையில் அகற்றுவதற்காக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் அதிகளவான மக்கள் தற்போது இம்முதலையை பார்வையிட அப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

No comments