Column Left

Vettri

Breaking News

மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில்  பயிற்றுவிப்பாளர் ஆசாத் பணிகள் பாராட்டத்தக்கது




மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில் பயிற்றுவிப்பாளர் ஆசாத் பணிகள் பாராட்டத்தக்கது பாறுக் ஷிஹான்- மத்தியஸ்ம் என்பது சமூகப் பணியின் பிரதானமான அம்சமாகும். இங்கு சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சமரசத்தை மேற்கொள்ளுதல் அவசியமாகும் என நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை(6) நடைபெற்ற போது தலைமை தாங்கி அங்கு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து உரையாற்றுகையில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் மேலும் கூறியதாவது, மக்களுடைய நம்பிக்கையின்பால் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் மத்தியஸ்தர்கள். குடும்ப கௌரவத்தை கருத்தில் கொண்டு பிணக்கை திறந்த நீதிமன்றத்தில் கையாளுவதை விடவும் மூடிய அறைக்குள் மத்தியஸ்த பொறிமுறையின் மூலம் இணக்கப்பாட்டை அடைந்து கொள்ளவே தீர்வுநாடிகள் விரும்புகின்றனர். சுய கட்டுப்பாட்டுடன், பரஸ்பர ரீதியிலான மரியாதையுடன் கூடிய வகையில் மத்தியஸ்தம் முன்னெடுக்கப்டல் வேண்டும் இங்கு மிக முக்கியமான பங்கு இரகசியம் பேணல் அவசியமாகும். அத்துடன் கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை மெய்ப்பிக்கின்ற விடயமாக மத்தியஸ்தம் அமைய வேண்டும். கடந்த காலங்களில் இருந்த சுயாதீன ஆணைக்குழுக்களை விடவும், தற்போதுள்ள ஆனைக்குழுக்கள் உண்மையில் சுயாதீனமாக செயல்படுகின்றன. அவற்றில் எந்தவிதமான அரசியல் ரீதியிலான தலையிடுகளும் கிடையாது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில் மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர் எம் ஐ எம் ஆசாத் அவர்கள் அளபெரிய பங்கினை ஆற்றி வருகின்றார். அந்த வகையில் அவருடைய பணிகள் பாராட்டத்தகதாகும் எனக் கூறினார். இதன் போது 233 ம் இலக்க நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 27 மத்தியஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் ஜெகராஜன் கலந்து கொண்டார்.கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி ரீ.ஜெஸான், அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர் எம் ஐ எம் ஆஸாத், நிந்தவூர் மத்தியஸ்த சபையின் புதிய தவிசாளர் ஏ ஏ ஹமீட், உப தவிசாளர் சட்டத்தரணி ஏ எம் பாயீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us