Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக  பதவியேற்பு




சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக பதவியேற்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார். சுப நேரத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்ற அவர் சப்ரகமுவ மாகாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட நூரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய நிலையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டள்ளார். மேலும் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் கடந்த புதன்கிழமை ( 23) தனது 38 வருட கால பொலிஸ் சேவையை பூர்த்தி செய்து ஓய்வுபெற்று சென்றிருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே.டி. சில்வா சிறிது காலம் கடமையாறறி வந்த நிலையில் அவரும் தற்போது இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திகவிற்கு இந்நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments