Column Left

Vettri

Breaking News

குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு




குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு பாறுக் ஷிஹான் வீட்டு அறையில் தூக்கிட்டு மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை(24) அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 34 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு தூக்கினால் மூச்சு திணரல் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மரணமடைந்தவர் 2 வயதுக் குழந்தையின் தந்தையான 220/2, சுட்டார் வீதி வீரமுனை- 3 சம்மாந்துறையை சேர்ந்த சொக்கலிங்கம் கிருஷ்ணராஜ் என்பவர் ஆவார்.இவர் மதுப்பழக்கத்திற்கு உள்ளானவர் என்பதுடன் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments