Column Left

Vettri

Breaking News

"அஷ்ரஃப் எனும் இலக்கியம்" ஆய்வு நூல் வெளியீட்டு விழா




"அஷ்ரஃப் எனும் இலக்கியம்" ஆய்வு நூல் வெளியீட்டு விழா பாறுக் ஷிஹான் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய திருச்சி மாநாட்டில் அரங்கேறிய இலக்கிய விமர்சகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வருகைதரு விரிவுரையாளருமான ஜெஸ்மி எம்.மூஸா எழுதிய "அஷ்ரஃப் எனும் இலக்கியம்" ஆய்வு நூல் வெளியீட்டு விழா மருதமுனை கலாசார மண்டபத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை(13) மாலை 3.45 மணிக்கு நடைபெறவுள்ளது வாழ்நாள் ஊடக சாதனையாளர் கலாபூஷணம் மர்ஹும் ஏ.எல்.எம்.சலீம் அரங்கில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு தென்கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறையின் தவிசு பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமை தாங்கவுள்ளார். தென்கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி எம்.எம்.பாஸில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வின் வெளியீட்டுப் பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளர் எம்.எச்.எம்.தாஜுதீன்(சறோ) பெற்றுக் கொள்ளவுள்ளார். கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் முன்னிலை அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசை தமிழ் செய்திப்பிரிவின் பிரதானி சீ.பி.எம்.சியாம் ஊடக அதிதியாகக் கலந்து கொண்டு மர்ஹும் ஏ.எல்.எம்.சலீம் நினைவலைகளை முன்வைக்கவுள்ளார். நினைவுப் பிரதியினை சவூதி அரேபிய்யா நீதி அமைச்சின் மென்பொறியியலாளர் சலீம் அக்கீல் பெற்றுக் கொள்ளவுள்ளார். விழாவின் தொடக்கவுரையினை கல்முனை வலயக் கல்வி அலுவலக தமிழ் மொழிக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் நிகழ்த்தவுள்ளதுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.அப்துல் றஸாக் நுால் ஆய்வுரையினை நிகழ்த்துவார். அலிஷ் ஊடக,கலை,இலக்கிய ,சமுக சேவை வலையமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், கல்வியியலாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எனப் பலரும் கௌரவ-விஷேட அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments